யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும், தற்போது பிரான்ஸ் பாரிஸை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் முருகேசு வைத்திலிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
எங்கள் குல தெய்வம், போன்றிருந்த தந்தையின் இழப்பால், நாம் துயருற்று இருந்த வேளை! தகவல் அறிந்து நேரில் வந்தும்! தொலைபேசியூடாகவும்! முகநூல், மின்னஞ்சல் மூலமாகவும்! ஆறுதல் கூறி அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மற்றும் மலர் வளையங்கள், மலர் மாலைகள் வைத்து அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், மேலும் சகல வழிகளிலும் உதவிய உற்றார் உறவினர் நண்பர்கள் என அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தினர் சார்பாக மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
காலங்கள் கடந்தாலும் உங்கள் நினைவுகள் என்றும் மாறாது… நிழலாய் எங்களுடன் என்றும் இருப்பீர்கள். தாத்தா 🕊️🥀