Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 06 OCT 1945
இறப்பு 27 FEB 2026
திரு ஆறுமுகம் முருகேசு
ஓய்வுநிலை பிரதேசசபை அலுவலர்- பச்சிலைப்பள்ளி
வயது 80
திரு ஆறுமுகம் முருகேசு 1945 - 2026 பளை, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

கிளிநொச்சி அரசர்கேணி பளையைப் பிறப்பிடமாகவும், இத்தாவில் பளையை நிரந்தர வதிவிடமாகவும், கனடா Ajax ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் முருகேசு அவர்கள் 27-02-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அன்னலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

அமரர் செல்லம்மா, சுப்பிரமணியம், நடராசா, அமரர் இராசலட்சுமி, அமரர் சொக்கலிங்கம், வேல்முருகு, சிவராசா, தங்கவேலு(ஓய்வுபெற்ற அதிபர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குலவீரசிங்கம்(பிரதேச சபை உறுப்பினர்), அமரர் மகேந்திரராணி மற்றும் சுந்தரலிங்கம்(ஓய்வு நிலை பிரதி அதிபர்), கணேசலிங்கம், சித்திரா, தவமணி(பரிசாரக உத்தியோகத்ததர்), கிருஸ்ணலிங்கம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

மனோகரி(முகாமைத்துவ உதவியாளர்-கிளிநொச்சி), யமுனா(லண்டன்), குமுதினி(குடும்பநல உத்தியோகத்தர் யாழ். போதனா வைத்தியசாலை), சசிகலா(தாதிய உத்தியோகத்தர் யாழ். போதனா வைத்தியசாலை), கோபிகா(சட்டத்தரணி, கிளிநொச்சி மாவட்ட/நீதவான் நீதிமன்றம) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சொர்க்கலிங்கம்(பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம்- கொடிகாமம்), சத்தியசீலன்(லண்டன்), கேதீஸ்ராஜன், மனோகரன்(கனடா), டினேசன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சுலக்சிகா, பகிந்தன், சானியா, துசாரா, ஆதிரா, தேவானுயன், விகர்னி, அக்சரன், ஆருஷி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-03-2026 வெள்ளிக்கிழமை அவரது நிரந்தர வசிப்பிட முகவரியான A9 வீதி, இத்தாவில், பளையில் நடைபெற்று பின்னர் பி.ப 03.00 மணியளவில் வேம்பொடுகேணி குருடிகாடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

தங்கவேலு - சகோதரன்
மனோகரி சொர்க்கலிங்கம் - மகள்
யமுனா சத்தியசீலன் - மகள்
குமுதினி கேதீஸ்ராஜன் - மகள்
சசிகலா மனோகரன் - மகள்
கோபிகா டினேசன் - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

Notices