5ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
10
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். தெல்லிப்பழை கொல்லங்கலட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Stuttgart ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஆறுமுகம் குணலிங்கம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அணையாத தீயினில்
அலையான சுவாலையாய்
ஐந்து வருடங்களாகியும்
அனல் கக்கி எரியுதையா
எங்கள் அப்பாவே
உங்கள் நினைவுகள்
அன்பின் அடையாளமே
அரவணைப்பின் உதாரணமே
பண்பின் திருவுருவே
பாசத்தின் இலக்கணமே
நேசத்தின் பிறப்பிடமே
நிறைந்திட்ட குல விளக்கே
நீர் மறைந்துபோன நாளன்று
உறைந்துதான் போனோம்
இன்னும் உடைந்துதான் போகின்றோம்
உருக்குலைந்து மாய்கின்றோம்
வருடங்கள் ஐந்து வந்திட்ட
போதினிலும் நம்ப மறுக்கிறதையா
எங்கள் மனங்கள்
உம் நல்ல முகம் மறைந்ததென்று
சொல்ல முடியவில்லை
எம் சோகத்தை மெல்ல முடியவில்லை
உம் நினைவுகளை
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
வருடம் ஒன்று கடந்தாலும் உங்கள் நினைவுகளுடன்!!!!!! உதவும் இதயங்கள் நிறுவனம் Helping Hearts e .V Germany