யாழ். மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Chelles ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் கனகசபை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்
வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்
என்ற வள்ளுவர் வாக்குக்கு இணங்க
அன்பிற்கு இலக்கணமாய் அவனியில் வாழ்ந்து
பண்புடைமை காத்து பக்குவமாய் வழிநடந்தீர்
இரக்கத்தின் இருப்பிடமாய் எல்லோருக்கும் இனியவராய்
நாணயமாய் நடந்தீர்
ஏனோ இறைவன் இடை நடுவில் பறித்து விட்டார்
கண் முன்னே வாழ்ந்த காலம்
கனவாகி போனாலும்
எங்கள் முன்னே உங்கள் முகம்
எந்நாளும் உயிர் வாழும்
மண்விட்டு மறைந்து நீங்கள்
விண்ணோக்கிச் சென்றாலும்
கண் விட்டு மறையாமல்
கனகாலம் இருப்பீர்கள்
என் செய்வோம்!
இறைவன் சித்தம் இது
இனி காண முடியாத சோக நிலையோடு
இங்கிருந்து ஏங்கியழுகின்றோம்
வாழ்க்கைச் சக்கரத்தில்
உயிர் உதிர்வு நிச்சயமானதென்றெண்ணி
பிரிந்துவிட்ட எம் தந்தையின்
ஆத்மா இறைவன் பாதங்களில்
சாந்தி பெறப் பிரார்த்திக்கிறோம்.
ஓம் சாந்தி !சாந்தி! சாந்தி!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் மதிய போசன நிகழ்வும் 07-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00. மணியளவில் Secours Catholique, 28 Rue Paul et Camille Thomoux, 93330 Neuilly-sur-Marne, France எனும் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. அத்தருணம் தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் வருகை தந்து அவரது ஆத்ம சாந்திப் பிராத்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்துக் கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.
வழிதடம்:
BUS > 303, 113, 203, 127
STOP> “place de la résistance “