யாழ். நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பிரமந்தனாறு 559/38ம் வாய்க்காலை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் கோபாலு அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
தாத்தா...
ஆலமரம் ஒன்று
விழு தெறிந்து நின்றது போல்
சிறகு விரிந்திங்கே சிரித்தீர்கள்...
இன்பமாக கவி, கதை கூறி
இனிமையாக மகிழ்வித்தீர்
தாலாட்டு பாடியெம்மை
களைப்பின்றி தூங்க வைத்தீர்
தந்தைக்கு மறுதந்தை
தரணியத்தில் உமைத்தவிர யாரிங்கே?
வெள்ளமது வென்றிடாது
அதை விஞ்சும் உம் பேச்சு
மன்னவனே மணி விளக்கே
மாண்புமிகு தனித்தலைவனே!
நீங்கள் கொண்ட துயில் காட்சி
பொறுக்குதில்லை எமக்கிங்கே
விம்மி விம்மி அழுகின்றோம்
வேதனையில் துவழ்கின்றோம்
உள்ளக் கோவில் தனில்
உமையிருத்தி வழிபடுவோம் தாத்தா!
எனினும் ஆறாது
எம்முள்ளம் தாங்காது
உங்களை பிரார்த்திப்போம் தினந்தோறும்
தாத்தா தாத்தா...
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அமரர் ஆறுமுகம் கோபாலு அவர்களின் அந்தியேட்டிக்கிரியை 28-12-2024 சனிக்கிழமை அன்று மு.ப 06.30 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும், வீட்டுக்கிருத்தியக் நிகழ்வுகள் 30-12-2024 திங்கட்கிழமை அன்று மு.ப 11.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெறும். அத்தருணம் தாங்கள் வருகை தந்து ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும். தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 559/38ம் வாய்க்கால்,
பிரமந்தனாறு.
Rest in peace Appappa, you’ve lived a very long life and may your soul find peace with God. Missing you so much, you were the best appappa in the world x. ?️?️