![](https://cdn.lankasririp.com/memorial/notice/209363/c57f3b95-e8b3-4b6d-9969-a68d8632fa63/23-64e6fe8d18153.webp)
![](https://cdn.lankasririp.com/memorial/profile/209363/c5659fa6-2e22-4061-b4ed-0d4f762e6392/21-614cad6f3cd78-md.webp)
யாழ். காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Horsens ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த ஆறுமுகம் பாலசுப்பிரமணியம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று ஆனாலும்
உங்கள்
அன்பு முகமும்
அரவணைப்பும்
உங்கள்
நினைவலைகளும்
எங்கள்
நெஞ்சை விட்டு
அகலவில்லை அப்பா!
அறிவூட்டி சீராட்டி வளர்த்த தந்தையே !
அன்பான அறிவு தந்து
அரவணைத்து மகிழ்ந்தவரே !!
உங்கள் திருமுகம் இனி எப்பிறப்பில் காண்போமப்பா?
தூணாக காலமெல்லாம்
காத்திடுவாய்
என இருந்தோம்
காலன் அழைத்தவுடன்
கரைந்ததேனோ காற்றோடு?
வானம் விரிந்திங்கு
வண்ண
மழை தூவினாலும்
காணும் உறவெல்லாம்
கைகொடுத்து உதவினாலும்
அப்பா
உங்கள் உறவு இப்போதில்லை
என்ற
உணர்வு அனலாய் எறிக்குதப்பா
அகிலமே வெறுக்குதப்பா!
நீங்கள் பூவுலகை விட்டு மறைந்த
போதும்
உங்களது ஆத்ம வழிகாட்டலிலும்
உங்களது நினைவுகளுடனும் எமது
வாழ்க்கை பயணம் தொடரும் அப்பா...
ஓராயிரம் வருடங்கள் ஆனாலும்
உங்கள் நினைவாய் வாழ்ந்திடுவோம்!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
ஓம் சாந்தி...!!! ஓம் சாந்தி...!!! ஓம் சாந்தி...!!!