..ஆழ்ந்த இரங்கல்கள்.. ஈழத்தில் நவாலியில் பிறந்து மன்னாரில் வாழ்ந்து வந்த வைத்தியர் திரு ஆறுமுகம் அரசக்கோன் ஐயா அவர்கள் ஈழத்தில் நடைபெற்ற போர் காலத்தில் எண்ணில் அடங்கா மக்களுக்கு இலவசமாக வைத்தியம் பார்த்தார். குறிப்பாக 2006 - 2011 வரை அம்மன் இல்லம் என்ற பெயரில் சில நூற்றுக்கணக்கான சிறுவர்களை மன்னாரில் தனது சொந்த வீட்டில் வைத்தே பாமரித்து வந்தார். இப்படியான இவருடைய சமூக சேவைகள் ஏராளம். அத்தோடு மட்டும் இவர் நின்றுவிடவில்லை, மன்னாரில் அமையப்பெற்ற ஞான வைரவர் ஆலயத்திற்கு முக்கிய பங்காற்றியவராவார். மேலும் தமிழுக்கும் சைவத்திற்கும் பலவழிகளில் தொண்டாற்றினார். இவருடைய குணாதிசங்கள் பலவற்றிலும் ஒத்துப்போகக் கூடியவராகவே இவருடைய மகன் திரு.அரசக்கோன் அஜிலன் அவர்கள் இனமான மீட்சிக்கான உயரிய பணிகளில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்தி வாழ்ந்து வருகிறார். இவர் குடும்பத்தின் ஆணிவேர் சாய்ந்த துயரில் நாம் தமிழர் பிரித்தானியாவும் பங்கெடுத்துக் கொள்கிறது.
My deepest condolences to Agilan and family. Kumaran Colombo, Srilanka.