யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை, நைஜீரியா, பிரித்தானியா லண்டன் Tooting ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமாமுகப்பெருமாள் தவராஜா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
எங்கள் குடும்பத்தின் உறவாய் வந்தாய்,
உயிரோடு கலந்த பந்தமாய் நின்றாய்
இன்று நீ இல்லையென்றாலும்,
உன் நினைவுகள் மட்டும் என்றும் அழிவதில்லை
சிரித்த முகமும், அன்பான வார்த்தைகளும்,
எங்கள் மனதில் என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும்
நீ விட்டுச் சென்ற பாசத்தின் தடங்கள்,
காலம் கடந்தாலும் மங்காது
கண்ணீர் துடைத்துக் கொள்ளலாம்,
ஆனால் உன் நினைவுகளை மறக்க முடியாது
ஒவ்வொரு நாளும் உன்னை நினைத்து
எங்கள் இதயம் அமைதியாக அழுகிறது
விண்ணகத்தில் அமைதியாக உறங்கும்
எங்கள் அன்பானவரே,
உன் ஆன்மா இறைவன் திருவடியில்
நித்திய
அமைதி பெற எங்கள் பிரார்த்தனைகள்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் அந்தியேட்டி கிரியைகள் 14-08-2026 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும். பின்னர் 16-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:30 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை Tooting & Mitcham Community Sports Club, Imperial sports Ground , Bishopsford Rd, Morden SM4 6BF, United Kingdom எனும் முகவரியில் மதிய போசன நிகழ்வு நடைபெறும் அத்தருணம் அனைவரும் கலந்துக்கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
Our heartfelt condolences for the sad demise of uncle . May his soul rest in peace . God be with Mami in this difficult time. Om Shanthi 🙏🏽 Shankari and Prabu