நன்றி நவிலல்
பிறப்பு 02 APR 2021
இறப்பு 02 APR 2021
திரு அருள்ரத்தினம் குலரத்தினம் (Acma)
சிரேஸ்ட கணக்காளர்
வயது Newborn
திரு அருள்ரத்தினம் குலரத்தினம் 2021 - 2021 காரைநகர், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். காரைநகர் பயிரிக்கூடலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட அருள்ரத்தினம் குலரத்தினம் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

தோற்ற்றத்தில் கம்பீரமாய், உள்ளத்தால் உருகுபவனாய்,
கல்வியில் சான்றோனாய், கடமையில் கண்ணியமாய்,
உண்மைக்கு உதாரணமாய், குணத்தில் இரத்தினமாய்,
ஆருயிர்க் கணவனாய், அன்புச் சகோதரனாய்,
அருமை மருமகனாய், ஆதரிக்கும் மைத்துனனாய்,
அள்ளித்தரும் மாமனாய், அரவணைக்கும் சித்தப்பாவாய்,
குடும்பத்தின் காவலனாய், எல்லோருக்கும் அன்பனாய்,
மானிடத்திற்கு உதாரணமாய் வாழ்ந்து,
சற்றென இறைவன் மேல் காதல் மிகுந்தது ஏனோ!

இன்றும் என்றும் உம் பிரிவால் அல்லலுறும்
மனைவி மற்றும் குடும்பத்தினர்

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 5 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.