Clicky

31ம் நாள் நினைவஞ்சலி
பிறப்பு 16 APR 1937
இறப்பு 10 OCT 2021
அமரர் அருள்ராசா நாகலட்சுமி (கனகம்மா)
வயது 84
அமரர் அருள்ராசா நாகலட்சுமி 1937 - 2021 புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

 உதிரம் விட்டு எம் உயிர் கொடுத்த அன்னையே
உறங்காமல் எமக்கு உணவு கொடுத்த தாயே
எம் உணர்வில் கலந்து எம் ஊன்று கோலாய் இருப்பவளே
நீ எமக்கு தெய்வம் அல்லவா...

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்புத்துறையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அருள்ராசா நாகலட்சுமி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.

அன்னார், புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கனகசபை கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அருள்ராசா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற நாகலிங்கம்(இந்தியா), கந்தசாமி(வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான அன்னலெட்சுமி மற்றும் நவரட்ணராசா ஆகியோரின் மைத்துனியும்,

யோகேஸ்வரி(யாழ்ப்பாணம்), வரதராசா(கொழும்பு), சிவராசா(கிளிநொச்சி), சுந்தரராசா(இந்தியா), கேதிஸ்வரி(ஜேர்மனி), ஜீவராசா(மன்னார்), ஜெகதீஸ்வரி(யாழ்ப்பாணம்), கனகராசா(மன்னார்), சோதீஸ்வரி(கொழும்பு), மன்மதராசா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கண்ணையா, ரதிதேவி, விமலாதேவி, லீலாதேவி, கெங்காதேவி, கோகிலதாசன்(ஜேர்மனி), கிருஸ்ணபாமா, தவராஜா, செல்வராணி, சிவநேசன் ஆகியோரின் அன்பு மாமியும்,

சுசிலா, லதானந்தன்(மாவீரர்), காஞ்சனா(ஜேர்மனி), வினோ, தயனி, சிந்து(லண்டன்), சாலா, காலஞ்சென்ற றஜி, திலக்ஷன், சுதர்சினி(பிரான்ஸ்), சுதர்சன், சுவேந்திரன், சுவேந்தினி(பிரான்ஸ்), சுயாழினி, தனுசன்(ஜேர்மனி), தபேசன்(ஜேர்மனி), தயந்தன்(ஜேர்மனி), திஷாந்தன்(ஜேர்மனி), நிதர்சன்(ஜேர்மனி), நிவேதன்(ஜேர்மனி), ஜீவதன், ஜீவிதா, கஜானி, கஜரூபன், நிரோஜன், நிரோஜினி, சுபாகரன்(ஜேர்மனி), கஜீபன், டிசாந்தன், யதுர்சன், கிஷாந்தன், சரூன்யா, ஜிதுர்சினி, சஞ்சய், அபிலாஸ், தர்சினி, பிரவின் ஆகியோரின் பேத்தியும்,

கேதுஷா, சுமணன், நசிந்தன்(பிரான்ஸ்), நதுஷன்(பிரான்ஸ்), நிதுஷன்(பிரான்ஸ்), ரியானா(ஜேர்மனி), சிவான்(ஜேர்மன்), அனோஸ்கா(ஜேர்மனி), சாருகா(ஜேர்மனி), சோபிகா(ஜேர்மனி), அனிக்கா(ஜேர்மனி) ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் அந்தியேட்டி கிரியை 07-11-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையில் நடைபெற்றது. வீட்டுக்கிருத்தியக்கிரியை 09-11-2021 செவ்வாய்க்கிழமை அன்று ந.ப 11:00 மணியளவில் எமது தற்காலிக இல்லத்தில் நடைபெறும் அத்தருணம் தாங்களும் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் கிரியைகளிலும் அதனைத் தொடர்ந்து நடை பெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

விட்டு முகவரி:
இல. 18/05 குறுக்குத் தெரு,
கொழும்புத்துறை,
யாழ்ப்பாணம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கலா - மகள்
ஜெகா - மகள்
மதன் - மகன்