1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
2
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி: 29-05-2023
ஜேர்மனி Herxheim ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அருள்ராசா ஆர்த்தி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
மண்ணில் மதிப்போடு மலர்ந்திட்ட பொன்மகளே!
நீ விண்ணில் கலந்திட்ட நாள் முதலாய்
நம் விழிகள் உறங்கிட மறுக்குதம்மா
எம் நெஞ்சக்குடுவைக்குள்
உன் அன்பை நிரப்பிவிட்டு
நீ நீண்ட துயில் கொண்டதேனோ?
காலங்கள் கடந்தாலும் எம்முடன்
நீ சிரித்து மகிழ்ந்த வருடங்களை
மறக்க முடியவில்லை
உன்னை மறக்க முடியாமல்
உள்ளம் எல்லாம் நிறைந்துள்ளாய்!
பாசமுள்ள சகோதரியே எம்மை
பரிதவிக்க விட்டு பறந்து நீ சென்றதும் ஏனோ?
கலங்கி துடித்தாலும் கண் காணாமல் நாம்
அழுதாலும் உன் ஆன்மா ஆண்டவன்
காலடியில் சாந்தியடைய அனுதினமும்
நாம் இறைவனை பிராத்திக்கிறோம் !
தகவல்:
குடும்பத்தினர்