சின்ணண்ணா என்றழைத்த எங்கள் அண்ணா
எங்கண்ணா போனாய் எனைக் கதற விட்டு
கொரோனா என்றார் கொள்ளை நோய் என்றார்
உன்னைக் கொள்ளை கொண்ட பின்தான் தெரியுதையோ
கடமையில் நீ தவறவில்லை கண்ணியத்தில் குறையவில்லை
காருணியம் என்று மாமிசத்தை கைவிட்டாய்
கருணை என்று காண்பவற்கு அள்ளிக் கொடுத்தாய்
கடவுள் ஏன் உனக்கு கருணை காட்டவில்லை – ஐயோ
ஆண்டுக்கு ஓன்றோ இரண்டு முறைதான்
அன்பாய் ஒன்றாய்க் கூடி மகிழ்ந்திருந்தோம்
அழகாய்ப் பல கதைத்திருந்தோம் நீ பல
ஆன்மீகக் கதைகள் சொல்லித் வைத்தாய்
ஆண்டவனிற்கு அது பொறுக்கலைப் போலும்
ஆருமில்லை இப்போ அருகில் எனக்கு- உன்னை
ஆண்டவன் அழைத்துவிட்டான் தன் அருகில் உன்
ஆத்மா சாந்தி அடைய அவனையே வேண்டுகிறேன்
புலம்புவது தம்பி ஞானம்
GERMANY
MAHENDI, You are in my thoughts and prayers. May your Soul rest in peace.