1ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 10 DEC 1951
விண்ணில் 23 NOV 2020
அமரர் அருளப்பு ஜோசப் (பவா)
ஓவியர்
வயது 68
அமரர் அருளப்பு ஜோசப் 1951 - 2020 ஊர்காவற்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 35 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி, பிரான்ஸ் Tours ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த அருளப்பு ஜோசப் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

உடன்பிறப்பே எங்கள் உயிர்ச் சகோதரனே!
உன் பிரிவு எம்மை உருக்குதைய்யா

பாசமுள்ள உடன்பிறப்பே
பார் புகழும் சகோதரனே!
நீ நடந்த பாதையெல்லாம்
எம் நினைவும் தொடர்கிறதே
பலமிழந்தோம் பரிதவிக்கின்றோம்
உன் இழப்பை எதிர் கொண்டு
ஆண்டு தான் ஆகினதோ!!

உன் உடன் பிறப்புகளுக்கோ
உன்னை இன்றி யாருமில்லை
உரிமையாய் கேட்பதற்கோ உடன் பிறப்போ
 இனி நீயும் இல்லை

உன்னைப் போன்ற அண்ணாவை
இனி எப்போது நாம் பார்ப்போம்
உருகிறது எம் உள்ளம்
அண்ணா அண்ணா
என்று அழுகின்றது எம் கண்கள்
நீ இல்லா உலகை எண்ணி!

கண்ணுக்கு கண்ணான எம் சகோதரனின்
ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்று
ஆண்டவரை வரம் வேண்டி நிற்கின்றோம்


தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Tue, 24 Nov, 2020
நன்றி நவிலல் Mon, 21 Dec, 2020