Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 16 JAN 1932
இறப்பு 17 OCT 2023
அமரர் அருளம்பலம் செல்வசரஸ்வதி
வயது 91
அமரர் அருளம்பலம் செல்வசரஸ்வதி 1932 - 2023 கைதடி மேற்கு, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். கைதடி மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, மலேசியா Ipoh, பிரித்தானியா Edgware ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வசரஸ்வதி அருளம்பலம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

நாட்கள் முப்பத்தொன்று கடந்து ஓடியதே
என் ஈர விழிக் கண்ணீர் மட்டும் ஓயவில்லையே
சிரிப்புட அழகாக வாழ்ந்த உன்னை
ஈசன் இரக்கமில்லாமல் அழைத்துச் சென்றானே!

மாறாத உன் அழகிய முகமும் அன்பான பேச்சும்
எம்மை வாட்டுதே !
நாளும் பொழுதும் நாம் வாடுகின்றோம்
உன் நினைவுகளால் துவண்டு!!

அல்லும் பகலும் அயராது உழைத்து
நல்ல மனையாளாய் அன்புத் தாயாய் வாழ்ந்தாயம்மா!
பிறந்த இடம்சிறக்க புகுந்த இடம் செழிக்க வாழ்ந்தாயம்மா!
எத்துணை இடர்வரினும் அத்தனையும் மறந்து
அன்பாக பேசி ஆறுதலடையச் செய்தீரே!
உள்ளம் உருகுதம்மா உம்பிரிவு தாங்காமல்
எம்மை எல்லாம் பரிதவிக்க விட்டு எங்கே சென்றீர்கள்
உம்மோடு வாழ்ந்த பசுமையான நினைவுகள்
என்றும் எம்மை விட்டகலாதம்மா

எம் விழிகளில் கண்ணீர் தந்தாய்
இறையடி இணைந்தே
இளைப்பாறுவாய்!!!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 20 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.