Clicky

மலர்வு 10 FEB 1929
உதிர்வு 31 MAY 2025
அமரர் அருளம்பலம் இராமநாதன்
ஓய்வுபெற்ற பாடசாலை அதிபர்
வயது 96
அமரர் அருளம்பலம் இராமநாதன் 1929 - 2025 யாழ் நெடுந்தீவு கிழக்கு, Jaffna, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

முகுந்தன் - அருந்தா (பிரான்சு) 11 JUN 2025 France

இறுதி வணக்கம்! நெடுந்தீவு மேற்கை பூர்வீகமாகக் கொண்ட எனது தந்தையார் இராமலிங்கம் கந்தையா 2008 இல் காலமாகியபோது வெளிவந்திருந்த தகவல் அறிந்து என்னைத் தொடர்பு கொண்டு தன்னை அறிமுகம் செய்து எமக்கிடையேயான உறவினைச் சுட்டிக்காட்டியி)ருந்தார் இராமநாதன் ஆசிரியர். சுமார் 17 ஆண்டுகளின் பின் இதே உறவு நிலையை அவரது மகனுக்கு நான் நினைவுகூர்ந்து கையைப் பற்றினேன். நானும் பிரான்சில்தான் வசிக்கிறேன். ஆயினும் சந்திக்கவே முடியவில்லை. புலம்பெயர் வாழ்வின் நீட்சி எம்மை புவியெங்கும் சிதறடித்தவாறு நிதானமாகக் கடந்து செல்கிறது. வைத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து காலமாகிய ஆசிரியர் இராமநாதன் அவர்களுக்கு எமது இறுதி வணக்கம்! அவரது மறைவின் துயரத்தைச் சுமக்கும் அனைவருக்கும் எமது ஆறுதல்கள்! க. முகுந்தன் குடும்பம்