

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வவுனியா, வள்ளிபுனம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த அருளம்பலம் கதிர்காமலிங்கம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
மூன்றாண்டு ஆன போதும்
உங்களை நாங்கள் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம் ஐயா ?
பாசத்தின் முழு உருவம் என்
பாதியிலே எம்மை விட்டு ஏன் போனீர்கள் ஐயா ?
கண்முன்னே நீங்கள் வாழ்ந்த காலம்
கனவாகிப் போனதுவோ!
எமை ஒரு நிமிடமும் காணாவிட்டால்
துடித்து பதை பதைத்த நினைவுகளை
இன்னும் கண்ணீர் விழி நனைக்குதய்யா!
ஆண்டுகள் மூன்று உருண்டோடி மறைந்தாலும்
அகலாது உங்கள் அன்புமுகம் எம் நெஞ்சை விட்டு
அன்போடும் பாசத்தோடும் அரவணைத்த
எங்கள் அன்புத் ஐயாவே!
எங்களை விட்டுப் பிரிந்ததேன்
பசுமையான எம் வாழ்வு
பரிதவித்துப் போனதுவோ!
இன்று பிரிவு என்னும் துயரால்
மூன்று ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்
எம் உள்ளங்களில் என்றும் நீங்காமல்
நிலைத்து வாழ்வீர்கள் ஐயா !
மூன்றாண்டு அல்ல
எத்தனை ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்
எங்கள் நெஞ்சிருக்கும் வரை ஐயா உங்கள் நினைவிருக்கும்
எத்தனைதான் எமக்கு இருந்தாலும்
எங்கள் உயிர் நீர் இல்லையே
ஏங்கித் தவிக்கின்றோம் ஐயா!
உங்கள் பிரிவால் துயருடன் வாழும்
குடும்பத்தினர்.
All TELECOM FRIENDS WORLDWIDE remembered your days while studying at Katubedde Campus and working at Telecom Department and Srilanka Telecom and conveyed their Deepest Sympathies to his family...