12ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் அற்புதம் சுந்தரம்பிள்ளை
1926 -
2014
புங்குடுதீவு, Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். புங்குடுதீவு மேற்கு 3ம் வட்டாரம் நடுக்குறிச்சியைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட அற்புதம் சுந்தரம்பிள்ளை அவர்களின் 12ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பிலே பூத்த எங்கள்
ஆருயிரே அம்மாவே!
ஆசையுடன் ஓடி வந்து
அன்புருக அணைத்தீரே!
இன்பமாக வாழ்ந்த உன்னை
காலன் கொண்டு சென்றனனே!
ஆயிரம் அறிவுரை சொல்லி
அகிலத்தைக் காணவைத்தீர்
சோதனை பல தாண்டி- எம்மை
சொர்க்கத்தின் கரைசேர்த்தீர்
எம் அன்னையே....
வார்த்தைகள் இல்லாத உங்கள்
வடிவம் கண்டோம் அம்மா
வர்ணிக்க முடியாத வார்த்தைகள் கண்டோம் அம்மா
அளவிட முடியாத உங்கள் அன்பு கண்டோம் அம்மா
சுயநலம் இல்லாத இதயம் கண்டோம் அம்மா
ஆனந்தமாய் நாங்கள் வாழ்ந்த போது
அம்மா என்றே இதய கீதம் பாடி
மகிழ்ந்தோம் அம்மா!
நிறைவாக நீ வாழ்ந்து நீள்துயில் கொண்டு
இன்றோடு 12 ஆண்டு.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute