

யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், மன்னார் நானாட்டான் ஆண்டார் செட்டிவெளியை வதிவிடமாகவும் கொண்ட ஆரோக்கியநாதர் அக்னேஸ் அம்மா அவர்கள் 30-03-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இன்னாசிமுத்து அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பிறஞ்சிப்பிள்ளை, றோசமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஆரோக்கியநாதர்(செல்லா) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற திரேசாபுஸ்பம் அவர்களின் அன்புச் சகோதரியும்,
துஷாந்தன், துஷாந்தினி(தங்கா), சசிகரன்(சசி), காலஞ்சென்ற றொசானி, நிறோஷனி, நிலானி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சாளற், டொனி, மெலனி, யூட், அலெக்ஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சவ்றோனா, சைறோன், செறோன், அஸ்சினி, ஜஸ்மினி நெகேமியள், றுத்விகா, அகானா, சகான், நொளான், மயூரா, ஆதிரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 01-04-2021 வியாழக்கிழமை அன்று நானாட்டான் தூய ஆரோக்கிய மாதா ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் நானாட்டான் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.