Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 15 FEB 1936
இறப்பு 14 MAY 2021
அமரர் ஆரோக்கியநாதர் இம்மானுவேல் நவரட்ணராஜா
ஓய்வுபெற்ற வரைபடவியலாளர் நீர்பாசன இலாகா
வயது 85
அமரர் ஆரோக்கியநாதர் இம்மானுவேல் நவரட்ணராஜா 1936 - 2021 மாதகல், Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், களுவாஞ்சிகுடியை வசிப்பிடமாகவும், கொழும்பை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த ஆரோக்கியநாதர் இம்மானுவேல் நவரட்ணராஜா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.  

எங்கள் அன்பு அப்பா
நீங்கள் விண்ணுலகில் கால்பதித்து
ஐந்தாண்டுகள் சென்றபோதும்
எங்கள் இதயமெனும் கோவிலில்
நிதமும் வாழ்கின்றீர்கள்

எமை வளர்த்த எம் அப்பா
என்றென்றைக்கும் எம்முடன் நீர்
எம் ஆயுள்வரை உன்னதமாய்
நினைத்திருப்போம்

வானத்தை விட்டு நிலவையும்
வாசத்தை விட்டு மலரையும்
பிரிக்க முடியாது - அது போல
உங்கள் நினைவுகளை எங்கள் 
நெஞ்சை விட்டும் விலக்க முடியாது

நீங்கள் எங்களை பிரிந்தாலும் 
எங்கள் ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்!

தெய்வத்துள் நீங்கள் மறைந்து விட்டாலும்
வையத்துள் வாழும் நாங்கள் நித்தமும்
நினைத்தே வாழ்வோம்! 

உங்களை மறுபடியும் கர்த்தருடைய வருகையில் முகமுகமாய் காண்போம் என்ற நம்பிக்கையோடு உங்கள் வாழ்க்கைக்காய் இறைவனுக்கு நன்றி சொல்கின்றோம்.

 "LOVE YOU DAD"

தகவல்: குடும்பத்தினர்