யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், வவுனியா, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அரியதாஸ் ஜினோபன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஈராண்டு கடந்த பின் உம் நினைவு நாடி
ஈர விழிகளுடன் உன் வதனம் தேடி
தீராத வேதனையை மனதில் பூட்டி
மாறாத நினைவுகளில் நாமும் வாழ்கின்றோம்..
மகனே என்று உனை அழைக்க
அவனியில் நீ இல்லை- எனினும்
அலைமோதும் நினைவுதனில்
அழியாமல் நீ இருப்பாய்...
நீ வளமோடு வாழ்வாய் என வாஞ்சையுடன்
நாங்கள் கண்ட கனவு ஏராளம்!
கண்மூடி விழிப்பதற்குள் கணப் பொழுதினில்
நடந்தவைகள் நிஜம் தானா என்று நினைக்கும்
முன்னே மறைந்தது ஏனோ!
நீ வான் உயரம் தெய்வத்தில்
ஒன்றாகி நின்று எமையெல்லாம் பார்த்திடுவாய்
என எண்ணி இரண்டாவது ஆண்டு
நினைவு நாளில் விழி அருவியாய் ஏங்கியே
நிற்கின்றோம் உமைப்பார்த்து!!
காலங்கள் விடை பெறலாம் ஆனாலும்
கண்முன்னே நிழலாடும் உம் நினைவுகள்
பல ஆண்டுகள் சென்றாலும் எம் உயிர் உள்ளவரை
உம் நினைவில் வாழ்ந்து கொண்டிருப்போம்!
உன் ஆத்மா சாந்தியடைய இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்....
மீளாத்துயரில் தவிக்கும் அப்பா, அம்மா,
சகோதரகள், சகோதரி
My prayers are with you. Like every other creations of God , we human also have a set date. This is painful but it has to be accepted as a rule of nature. I pray and wish you all to recover soon...