1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் அப்புத்துரை வசிதரன்
வயது 48
அமரர் அப்புத்துரை வசிதரன்
1974 -
2023
யாழ் புத்தூர் வடக்கு, Jaffna, Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி:21/09/2024
யாழ். புத்தூர் வடக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Luzern ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அப்புத்துரை வசிதரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அப்பா! அன்புக்கு உருவம் நீங்களப்பா!
எங்களை விட்டு நீங்கள்
எங்கு தான் சென்றீர்களோ?
ஆண்டு ஒன்று ஆகிவிட்டதப்பா
உங்கள் அன்பு முகம் பாராமல்
நாங்கள் கலங்கித் தவிக்கின்றோம்!
ஆலவிருட்சம் போல் கிளைகளைப் பரப்பி
எங்களை எல்லாம் தாங்கி நின்றவரே!
இன்று நீங்கள் இல்லாமல் தனியாய் தவிக்கின்றோம்
நாம் வாழும் காலம் வரை உங்கள் நினைவுகளும்
எங்கள் உள்ளத்தில் வற்றாத
ஊற்றாகப் பொங்கிப் பெருகும்!
உங்கள் வாழ்வின் சிறப்புகளை
எங்கள் மனதில் நிலை நிறுத்தி
உலகம் உங்களைப் போற்றும்படியாக
நாங்கள் மண்ணில் வாழ்வோம்!
உங்கள் ஆத்ம சாந்திக்காய்
உளமுருகி இறைவனிடம் வேண்டுகிறோம்..!
தகவல்:
குடும்பத்தினர்