
யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், உரும்பிராயை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அப்புத்துரை தங்கரத்தினம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா என்ற சொல்லுக்கு
அர்த்தம் சொல்ல மொழிகள் போதாது.
ஆண்டுகள் ஒன்று ஓடி மறைந்தன.
எம்மை அரவனைத்த அம்மா எங்கே
ஆசை முத்தமிட்ட கன்னமெங்கே.
கட்டித்தழுவிய கரங்கள் எங்கே
இன்று நீ எங்கே.
நாம் மண்ணைத்தொட்ட நாள் முதல்
நீ விண்னைத் தொடும் நாள் வரை
நீ சொரிந்த அன்பிற்கோ
எல்லைகள் ஏது அம்மா.
தாயே தூக்கம் தொலைந்து ரெம்பநாளாச்சு
ஏக்கம் நிறைந்து நெஞ்சு பாழாய் போச்சு
ஒரு முறை போதுமா உன் கடன் தீர்க்க
இன்னொரு முறை என்ன இன்னோராயிரம் முறை
உன் மடியினில் மறுபடி பிறந்து உன்
தீரா
கடன் தீர்த்திட வேண்டும்
மீளாத்துயில் கொண்ட எம் அன்பு
தெய்வத்தின் ஆத்மா சாந்தி அடைய
இறைவனை பிராத்திக்கின்றோம்
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி