யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட அப்பையா சிவபாதசோமசுந்தரலிங்கம் அவர்களின் நன்றி நவிலல்.
ஆசையாய் ஓடி வந்தோம் அன்றிரவு அசைவின்றி
உறங்கி விட்டீர் நீங்கள்
பாசமாய் வேண்டிய தெய்வம் எல்லாம் சிந்திய
கண்ணீருக்கு வழி சொல்ல மறந்ததேனோ!
நாட்கள் பலவாகி மாதம் ஒன்றானதோ வார்த்தைகள்
மெளனமாகி இதயங்கள் காயமாகி விழியோரம்
ஈரமாகி செல்கிறது நாட்கள் தினமும்
பண்போடு கதை சொல்லி அன்போடு தாலாட்டும்
பாசத்தின் பிறப்பிடம் நீங்கள் தாலாட்டு பல உண்டு
தாலாட்டும் தோள்கள் எங்கே!
அரவணைக்கும் கைகள் எங்கே!
அழியாத காவியமாய் அன்பான
ஓவியமாய் எமக்குள் நீங்கள் என்றும் நீங்கள்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
அன்னாரின் மரணச் செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த போது எம் இல்லத்திற்கு நேரில் வந்து அனுதாபங்களைத் தெரிவித்தவர்களுக்கும், தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு துக்கம் பகிர்ந்தவர்களுக்கும், தொலைவில் இருந்து வந்து தோள் கொடுத்தவர்களுக்கும், மலர் வளையங்கள் அனுப்பியவர்களுக்கும், இறுதிக்கிரியையில் கலந்து கொண்டு அனுதாபங்கள் தெரிவித்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
Our deepest condolences to you and your family. May his soul rest in peace.