யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கை வதிவிடமாகவும், கனடா Toronto ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட அப்பையா சந்திரசேகரம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
எம்மை ஆறாத் துயரில் ஆழ்த்தி மீளாத் துயில் கொண்ட அப்பையா சந்திரசேகரம் அவர்களின் பிரிவுச் செய்தி கேட்டு, நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசி, மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் ஆகியவை மூலமாக எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த உற்றார், உறவினர், நண்பர்களுக்கு எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 09-06-2020 செவ்வாய்க்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைப்பெறும்.
We are so sorry to hear about your dad. We are keeping you and the family in our thoughts and prayers. We are here for you if you need anything. Love, Ravinthiran Thambirarajah and Family (UK).