1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 05 MAR 1946
இறப்பு 10 MAY 2020
திரு அப்பையா சந்திரசேகரம் 1946 - 2020 இருபாலை, Sri Lanka Sri Lanka
Tribute 33 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கை வதிவிடமாகவும், கனடா Toronto ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அப்பையா சந்திரசேகரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எல்லாமாய் நீயிருந்தாய் அப்பா- நாம்
எல்லோரும் மகிழ்ந்திருந்தோம்
சொல்லாமல் உன் பார்வை அது
செல்லும் வழி நாம் நடந்தோம்

தோள் மீது எமைச் சுமந்தாய்
சோறூட்டி தினம் சிரிக்க வைப்பாய்
காலத்தில் உன் மடியில் நாம் வளர
ஊர் கூட்டிச் சிறப்புடனே தேரிழுத்தாய்

முள்ளான பாதையெல்லாம்- எமை
ஆளாக்க நடந்தாயப்பா
உன் கனவை நாம் நிறைக்க
முளைத்தெழுந்து வருமுன்னே
எல்லாம் பொய்யாக்கி இல்லாத தொன்றாக்கி
சொல்லியழ எம்மைவிட்டு நல்லுலகம் சென்றுவிட்டாய்

நிலவுகின்ற வானும் நிறைந்து நிற்கும் காற்றும்
பொய்யாத மறையும் பெய்கின்ற மழையும்
நில்லாமற் சுற்றுகின்ற நிறையுலகு உள்ள வரை
அப்பா நீ நிறைந்திருப்பாய் எம் இதயமது துடிக்கும் வரை

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்....  

உங்கள் பிரிவால் வாடும் மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்

தகவல்: குடும்பத்தினர்