Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 27 DEC 1947
இறப்பு 29 OCT 2025
அமரர் அப்பாக்குட்டி செல்வநாயகம்
ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்
வயது 77
அமரர் அப்பாக்குட்டி செல்வநாயகம் 1947 - 2025 சரசாலை வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். சரசாலை வடக்கு சாவகச்சேரியை பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Leiden ஐ இடைக்கால வதிவிடமாகவும், யாழ். சுன்னாகம் தெற்கை வதிவிடமாகவும் கொண்டிருந்த அப்பாக்குட்டி செல்வநாயகம் அவர்களின் 1ஆம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்புத் தெய்வமே ஆருயிர் அப்பாவே!
அன்போடு எங்களை அனுதினமும் அரவணைத்தீர்கள்
அல்லும் பகலும் அயராமல் எம்மை காத்தீர்கள்
உலகுக்கு நீங்கள் உத்தமனாய் வாழ்ந்து காட்டினீர்கள்
உயிரிலும் உணர்விலும் ஒன்றாக கலந்திருந்தீர்கள்
உங்கள் உயிர் உள்ளவரை எங்களுக்கு காவலாய் இருந்தீர்கள்
உங்களுடன் இருந்தவரை கலங்காது நாமிருந்தோம்
உள்ளத்தில் பல கனவுகள் நாம் கண்டோம்
கனவெல்லாம் நனவாகும் காலம் வரமுன்னே
கண்மூடி மறைவீர்கள் என்று
கனவிலும் கண்டறியோம்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனை பிரார்த்திக்கின்றோம்

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices

மரண அறிவித்தல் Wed, 29 Oct, 2025