1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். நல்லூர் இல. 63/3 கொண்டலடி லேனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அப்பையா இரத்தினம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
காலங்கள் ஓராண்டு கடந்தது அம்மா,
எங்கள் கண்களில் இருந்து உங்கள்
திருமுகம் என்றும் மறையாது அம்மா,
காலம் எல்லாம் துணை இருப்பாய் என்று
எண்ணி இருந்தோம் அம்மா,
கனப்பொழுதில் கண்களை மூடிக்
கொண்டது ஏன் அம்மா,
கண்ணீர் மழை பொழிகிறோம் அம்மா,
உங்கள் செவிகளுக்கு கேட்கவில்லையோ அம்மா,
குணமடைந்து இல்லம் வருவாய் என்று
எண்ணி இருந்தோம் அம்மா,
உங்கள் பிரிவுத்துயர் கேட்டு எங்கள்
இதயம் ஒரு கணம் துடிக்க மறந்து
போனது ஏன் அம்மா,
உங்கள் ஆத்மா சாந்தியடைய உங்கள் பிள்ளைகள்
அனைவரும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம் அம்மா..
ஓம் சாந்தி, ஓம் சாந்தி, ஓம் சாந்தி!!!!
தகவல்:
பிள்ளைகள்