முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், டென்மார்க்கை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஆபேல் லூக்காஸ் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
வானத்து வெண்ணிலவு
மாதத்தில் ஓர் நாள் தெரிவதில்லை
எம் பாசத்தின் திரு
உருவம்
ஒரு நொடியேனும் எம்
சிந்தையில் இருந்து மறைந்ததில்லை
கருவினில் துடித்த இதயம்
துடிக்க மறந்தது பூமித்தாயின்
மடியினில் தலை சாய்த்த
ஒர் ஆண்டு இன்று
தேகம் விட்டு சுவாசம் நிங்கியது
இன்றுபோல் உள்ளது
நின்றால் நடந்தால்
சிரித்தால் கதைத்தால்
என்றும் உம்மை
எம்முள் காண்கிறோம்
உன் குரல்கேட்டு திரும்பும்
அன்பான மனைவி
தந்தையின் பாசத்திற்கு
ஏங்கும் பிள்ளைகள்
தாத்தாவிடம் குறும்பு
செய்ய முடியாத பேரர்கள்
தம்பி, அண்ணா என்று தவிக்கும்
தொப்பிள் கொடி உறவுகள்
அன்பினால் கட்டுண்ட மருமக்கள்
அனைவர் இதயத்திலும்
அழியாத இடம் பிடித்து
தவிக்க விட்டு சென்று
ஓா் ஆண்டு இன்று...
படைத்தவன் வகுத்ததை முடித்துவிட்டு
அவன் பாதத்தில் சரணடைந்தீர்
மானிடா் வாழ்வினில் மரணத்தை
வெண்றவர் இல்லை என்று அறியாத உறவுகள்
ஈர விழிகளுடன் வாழும்
ஓா் ஆண்டு நினைவு இன்று...
பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு
அழிந்துபோனாலும் தேவனால் கட்டப்பட்ட
கை வேலை இல்லாத நித்திய வீடு பரலோகத்தில்
நமக்கு உண்டு என்று அறிகின்றோம்.
2 கொரிந்தியர்: 5/1
You may Rest In Peace Almighty will keep you in the right of his hand For thine is the kingdom, and the power, and the glory