யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அன்ரனி வஸ்த்தியாம்பிள்ளை அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்பு தெய்வம் Daddy
நீங்கள் விண்ணுலகில் கால்பதித்து
ஆண்டுகள் பல சென்றபோதும்
எங்கள் இதயமெனும் கோவிலில்
நிதமும் வாழ்கின்றீர்கள்!
நீங்கள் எம்முடன் வாழ்ந்த நாட்களை
தினமும் நினைக்கின்றோம் Daddy...
நீங்கள் எம்முடன் இருப்பதாகவே
உணர்கின்றோம்!
நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்து
எத்தனை ஆண்டுகள் சென்றாலும்
Daddy உங்கள் நினைவுகள்
எம்மை விட்டு நீங்காதவை!
காலங்கள் கடந்து போகும் ஆனால்
கண்மணியே Daddy உன் நினைவுகள் மட்டும்
காலம்தனை வென்று எம்மிடத்தில் நிற்கும் - எம்
கண்ணிறைந்த கண்ணீரோடு...!
உங்களை எம் வாழ்நாள்
உள்ளவரை எம் இதயத்தில்
வைத்து வாழ்வோம்!
என்றும் அழியாத நினைவுகளோடு!
உம் நினைவு நாளிற்கு எம் அளவில்லா அன்பை
மலர் சாந்தியாக செலுத்துகின்றோம்!
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Walthamstow வை வதிவிடமாகவும் கொண்டிருந்த அன்ரனி பார்க்கர் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
அன்புள்ள பெரியண்ணா, உங்கள் சகோதரிகள்
எழுதும் கண்ணீர் மடல்
மூத்த மகனாக பிறந்து பெற்றோருக்கு
பெருமை சேர்த்தாய்
நல்ல மகனாக
Daddyக்கு துணையாய் நின்றாய்
எங்களுக்கு பெரியண்ணாவாக, பாசமுள்ளவனாக,
ஆசானாக வழி நடத்தினாய்.
சின்னச் சின்ன சண்டைகள்
போட்டுக் கொள்வோம்
ஆனாலும்
உன்னுடைய கள்ளம் கபடம் இல்லாத
சிரிப்பினால்
எல்லாவற்றையும் மறக்கடித்து
விடுவாய்
நீ பிறருக்கு உதவிடுவதில்
மகாவீரன்!
அம்மா “பெரியவனே!”
எனக் கூப்பிடும்போது
உன்
முகத்தில் ஏனோ அவ்வளவு
பெருமிதம்!
உங்களுடைய
இனிமையான பேச்சாலும்,
நகைச்சுவையாலும்,
எங்களை சிரிக்க வைப்பாய்
ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
அண்ணன் தங்கை உறவு உயிரிலும்
உயர்ந்ததுதான்
என்பதை உன்
பிரிவு உணர்த்துகின்றது
உன்
நினைவுகள் என்றும் எங்கள் இதயத்தில்
முள்ளாய் குத்துகின்றது
உம்மை
மறந்து போயும் மறக்கமாட்டோம்.
உம் பிரிவு எமக்கு துயர்!
உம் மறைவு எமக்கு குறை!
உம் துயரால் வாடும் அண்ணனின்
நினைவுகளுடன்
பாசமுள்ள சகோதரிகள்.
அன்புக்கும், பண்புக்கும் பொக்கிஷமாய்!
அன்பு நெஞ்சங்களில் அகலா இடம்பிடித்தாய்!
என்றும் உம் நினைவுகளுடன்
அன்பு சகோதரர்கள்.
Wishing you peace to bring comfort, courage to face the days ahead and loving memories to forever hold in your hearts. Syed and All of us at RIPBOOK