யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Walthamstow வை வதிவிடமாகவும் கொண்டிருந்த அன்ரனி பார்க்கர் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்ரனி மேரித்திரேசாவின்
மகனும், மயில்வாகனம் சரஸ்வதியின் மருமகனும் ஆவார்.
ஆண்டு ஒன்று கடந்தாலும்
ஆறிடுமோ உங்கள் நினைவலைகள் அப்பா!
கண்ணின் மணிபோல்
எங்களைக் காத்த அன்புத்தெய்வமே
ஆறிடுமோ எங்கள் துயரம்...
குடும்பத்தின் குல விளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்த எங்கள் குள விளக்கே!
உங்களையே உலகமென உறுதியாய்
நாமிருக்க ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?
நீங்கள் எங்களை விட்டு நீண்டதூரம் சென்றாலும்
உங்கள் ஆசைமுகம் எங்கள் நெஞ்சில் நிலைத்திருக்கும்
உங்களோடு வாழ்ந்த நாட்கள் திரும்பி வராதா
என்று எண்ணித் துடிக்கின்றோம்...
ஓராயிரம் வருடங்கள் ஆனாலும்
உங்கள் நினைவாய் வாழ்ந்திடுவோம்!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
Our deepest condolences for Saro and family