மகன், அண்ணன், மச்சான், நண்பர், மாமா, தொட்டப்பா. கணவன் என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பெயர் இருக்கிறது. ஆனால் ஆண்டவர் எனக்கு அப்பா என்று அழைக்கும் பாக்கியத்தை எனக்குக் கொடுத்தார். அப்பா மிகவும் அன்பான, பாசமான, அக்கறையான, இரக்கமுள்ள அப்பா. நான் பிறந்த நாளில் இருந்து என்னை பெரிய பரிசாகக் கருதினார். என்னை தனது அகன்ற தோளில் தூக்கிக் கொண்டு உலகம் முழுவதையும் காட்டினார். அப்பா என்னை எப்பொழுதும் செல்லம் என்று தான் செல்லமாக கூப்பிடுவார். எவ்வளவு கஸ்ரங்கள் மத்தியிலும் என்னை ஒரு குறையும் இல்லாமல் பார்ப்பார். அம்மாவையும், என்னையும் தவிர இந்த உலகத்தில் எனக்கு வேறு தேவையில்லை என்று தான் சொல்லுவார். என்னுடை வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்று எனக்கு கற்றுத் தருவார். நுரையீரல் பல்மனரி ஃபைப்ரோஸிஸ் கண்டு அறிந்ததும் அப்பா தனது வாழ்க்கையை நீடிக்க நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய போராடினார். அதில் வெற்றியும் கண்டார். குணமடைந்ததும் 12 வருடமாக தனது பராமரிப்பைத் தொடர்ந்தும் கவனித்து வந்தார். திரும்பவும் சுவாசிக்க முடியாத நிலை வந்த பொழுதும் அப்பா ஒரு முறைப்பாடும் சொல்லமாட்டார். கடை காலங்களில் வென்ரிலேற்றர் போடுவதை விரும்பினார். எவ்வளவு வலிகள், நோவுகள், கஸ்ரங்கள் வந்தபோதிலும் இன்னும் கூடக் காலம் வாழவேண்டும் என்று எல்லாவற்றையும் எங்களுக்காகப் பொறுத்துக் கொண்டார். ஒவ்வொரு நாளும் நானும் அம்மாவும் வைத்தியசாலையில் சென்று பார்க்கும் பொழுது எங்களை தான் கஸ்ரப் படுத்துவதாக நினைத்து எங்களிடம் மன்னிப்புக் கேட்பார். உண்மையில் என்னையும் அம்மாவையும் கஸ்ரப் படுத்தாமல் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அப்பாவின் கடவுள் நம்பிக்கை அவரது எல்லா வருத்தங்களையும் தாங்கக் கூடியதாக இருந்தது. ஒவ்வொரு நாளும் திருவிவிலியம் வாசிப்பார். திருப்பலியில் கலந்து கொள்வார். வெள்ளிக்கிழமை வழிபாடுகளில் கலந்து கொள்வார். அப்பா என்னை காலையும், படுக்கைக்குப் போதுமுன்னும் ஆசீநீர் தண்ணீரால் ஆசீர்வதிப்பார். அன்பான, பாசமான, நேசமான, அக்கறையான, இரக்கமான அப்பாவை இவ்வளவு காலமும் எனக்ககுத் தந்த இறைவனுக்கு நான் மிகுந்த நன்றி கூறுகின்றேன். நான் இன்னும் உங்களுடைய செல்லப் பிள்ளை அப்பா அப்பா அப்பா.
I am so sorry to hear that my dear classmate Anton passed away from his earthly life. I did not know the whereabouts of Anton until this evening when I heard through Patrician channels. I am Jerome...