முல்லைத்தீவு வண்ணாங்குளத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை இருதயநாதர் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அப்பா
இன்று ஒருவருடம் ஆகிவிட்டது
ஆனால் உங்களை இழந்த வலி மட்டும்
இன்னும் நேற்று நடந்தது போல்
மனதை நொறுக்குகின்றது..
காலம் நகர்ந்தாலும்
உங்கள் நினைவுகள்
நகரவேயில்லை
நீங்கள் இல்லாத உலகில் வாழ்கின்றோம் நாம்
நீங்கள் இல்லாத வாழ்க்கையை
ஏற்க மனம் மறுக்கின்றது
நீங்கள் விட்டுச்சென்ற
நினைவுகள் தான் எங்களை வாழ
வைத்துக் கொண்டிருக்கின்றன..
உங்கள் நினைவுகள் எங்கள் மூச்சாகவும்
உங்கள் அன்பு எங்கள் பலமாகவும்
உங்கள் ஆசிகள் எங்கள் வாழ்வின்
வழிகாட்டியாகவும் என்றும்
தொடர்கின்றன அப்பா...
என்றென்றும் உங்கள் நினைவுகளுடன்
வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்பத்தினர்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை
பிராத்திக்கின்றோம்!!!
"May his beautiful memories provide comfort to all the family members " the soul may been left this world, but the memories will always linger in those who loved him !