

முல்லைத்தீவு வண்ணாங்குளத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை இருதயநாதர் அவர்கள் 11-06-2025 புதன்கிழமை அன்று அயர்லாந்தில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுவானி அந்தோனிப்பிள்ளை செபமாலை தம்பதிகளின் மூத்த புதல்வனும், காலஞ்சென்றவர்களான அந்தோனிமுத்து மரியஞானசௌந்தரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மரியஞானமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
அன்றூ நிதர்சன் (வைத்தியர் - அயர்லாந்து), ஆன் அர்ச்சனா (ஆசிரியை - மு/ அம்பலவன் பொக்கணை மகா வித்தியாலயம்), இவான் சந்துரு(கனிஷ்ட கணக்காய்வாளர் WSK நிறுவனம் - கொழும்பு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மெகன் (வைத்தியர் - அயர்லாந்து), யனோஜ்(ஆசிரியர் - மு/ புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
எலனோறா, மக்டாரா(அயர்லாந்து), அஸ்விதா ஆகியோரின் அன்புப் பேரனும்,
புஸ்பத்திரேஸ், அருட்சகோதரி மரியராணி (திருக்குடும்ப கன்னியர் மடம் பண்டிவிரிச்சான்), பற்றிமாறோஸ் (கனடா), பத்திநாதர் (சுவிஸ்), இலங்கநாதர் (கனடா), யோகநாதர் (சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஞானப்பிரகாசம், அன்ரன் (கனடா), ஜெயராணி (சுவிஸ்), ஜெயந்தி (கனடா), மேரி றெஜினா (சுவிஸ்) மற்றும் பிலோமினா, காலஞ்சென்ற மேரி மாகிறேற், பொலின் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற மரியதாசன், ஜெயா ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் 24-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08:30 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் முல்லைத்தீவு இராயப்பர் ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்படும் இரங்கல் திருப்பலியைத் தொடர்ந்து பூதவுடல் முல்லைத்தீவு உண்ணாப்புலவு சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
"May his beautiful memories provide comfort to all the family members " the soul may been left this world, but the memories will always linger in those who loved him !