யாழ். ஊறணி காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Leeuwarden ஐ வதிவிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை அருளானந்தம் அவர்களின் நன்றி நவிலல்.
அப்பா!
நாங்கள் தொலைத்த எங்களின்
முகவரி நீங்கள்- இன்னும்
இருந்திருக்கலாம் எங்களோடு சில காலம்
எமைவிட்டு சென்றது ஏனோ விரைவாக!
எங்கள் குடும்பபெனும் ஆலமரத்தின்
வேர் நீங்கள்
நீங்கள் விட்டு சென்ற இடத்தில்
வழியும் கண்ணீரோடு
விழிகொண்டு தேடுகின்றோம்
உங்கள் ஆன்மா எங்கிருந்தாலும்
உங்களின் விழுதுகளை வேர்களாக்கி
விருட்சமாய் உருவாக்கும் எனும்
ஆழமான நம்பிக்கையில்
நீங்கள் எம்முடன் இல்லை என்பதை
உணர்கின்ற ஒவ்வொடு நொடியும்
எம்முள் இன்னும் ஆழமாய் பதியப்படுகின்றது
என்றும் மறந்து போக முடியாத
உங்களின் நினைவுகள்
உம் ஆன்மா அமைதி பெறட்டும்
உம் மந்திர புன்னகை இவ் உலகில்
நிலை கொள்ளட்டும்
என்று நீங்கா நினைவுகள்
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.