யாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அந்தோனியாப்பிள்ளை அமிர்தம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் ஒன்று ஆன போதிலும் நீங்களின்றிய
துயரங்கள் இன்னும் ஆறவில்லை அம்மா!!
எம்மை படைத்த எம் குலதெய்வமே
பணிகின்றோம் உங்கள் பாதம் தொட்டு
அன்பு பெருக அணைத்த கரங்களும்
நாம் ஆழ்ந்து உறங்கிய பாச மடியும்
இன்பம் தரும் தங்கள் இனிய சொற்களும்
இன்றியே நாங்கள் இயல்பிழந்தோம் அம்மா!!
ஓரு வருடங்கள் உருண்ட போதிலும்
உங்களின் நினைவுகள் மனதில் ஓயாத அலைகளாய்
ஒவ்வொரு நாளும் ஏதோ ஓரிடத்தில் உங்களின் ஞாபகம்
அம்மா மீண்டும் வரமாட்டாரா என ஏங்குவோம் நாங்கள்!
உங்களின் மீதான எங்களின் தேடல்கள்
எங்கள் உயிர் மூச்சு உள்ளவரை ஓயாது!!!
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
By Sheila Family From Singapore.
வருடங்கள் போனால் என்ன நம் வாழ்நாள் முளுதும் எம்முடன் வாழ்கிறீர்கள். உங்கள் ஆசியுடன். தாயே