யாழ். பருத்தித்துறை வராத்துப்பளையை பிறப்பிடமாகவும், புற்றளையை வசிப்பிடமாகவும் கொண்ட A. N. S. திருச்செல்வம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
எங்கள் அன்புத் தெய்வமே!
நீங்கள் விண்ணுலகில் கால்பதித்து
நாட்கள் 31 சென்றபோதும்
எங்கள் இதயமெனும் கோவிலில்
நிதமும் வாழ்கின்றீர்கள்!
நீங்கள் எம்முடன் வாழ்ந்த நாட்களை
தினமும் நினைக்கின்றோம்!
நீங்கள் எம்முடன் இருப்பதாகவே உணர்கின்றோம்!
நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்து
எத்தனை மாதம் சென்றாலும்
உங்கள் நினைவுகள் எம்மை
விட்டு நீங்காதவை!
என்றும் அழியாத நினைவுகளோடு!
உம் நினைவு நாளிற்கு எம் அளவில்லா
அன்பை மலர் சாந்தியாக செலுத்துகின்றோம்!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
சாமஸ்ரீ தேச ஜோதி A.N.S. திருச்செல்வம் J.P அவர்களின் அந்தியேட்டிக்கிரியை 24-07-2026 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 05.00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையில் நடைபெறும். அந்நிகழ்விலும், 25.07.2026 சனிக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் மு.ப 10.00 மணியளவில் நடைபெறும் சபிண்டீகரண நிகழ்விலும், ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
RIP -