

யாழ். வேலணை கிழக்கு வேலணை 5ம் வட்டாரம் சிவநிலையத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அன்னபூரணம் சாந்தலிங்கம் அவர்களின் 20ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் இருபது அகன்றோடி விட்டாலும்
அழியாத நினைவலைகள் எம் அடிமனதின்
ஆழத்தில் இருந்து வதைக்கிறதே அம்மா
என் செய்வோம் நாங்கள்?
ஏற்றமுடன் நாம் வாழ ஏணியாக இருந்து
எம்மை வழிநடத்த வேண்டும் அம்மா!
பாசத்தை அள்ளிக் கொடுத்தாய்
அன்பால் அரவணைக்க கற்றுக் கொடுத்தாய்!
இரவெல்லாம் விளக்காக விழித்திருந்து
எமக்காய் உன் உறக்கம் துறந்து
மகிழ்ந்திருந்தாய் அம்மா…!
திருப்ப முடியாத காலத்தை
உங்கள் நினைவுகளுடனும்
நிழல்ப்படத்தினூடாகவும்
திரும்பிப்பார்க்கின்றோம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
என்றும் உங்கள் நினைவுகளுடன்
பிள்ளைகள்- அம்பிகா இராஜலிங்கம்(சுவிஸ்),
சிவநாதன் சாந்தலிங்கம்(லண்டன்), லதா ராஜன்(பிரான்ஸ்)