தெல்லிப்பழை யில் ஒரு அழகிய காலம். அன்னார் கூட பிறந்த சகோதரர்கள் பிள்ளைகள் அவரை அன்புடன் சீனியம்மா என்று அழைத்து உறவாடுவர். அவர் அறிவாற்றல் மிகு பேச்சில் மட்டுமல்ல, சமைக்கும் கைபக்குவத்துக்கும் பெயராக சீனியம்மா இருந்தார். சகோதரர்கள், பெறாமக்கள், மருமக்கள் அனைவருடனும் அன்புடன், உரிமையுடன், பண்புடன் அவர் பழகும் விதமே அவரை எல்லோருக்கும் பிடித்து இருந்தது. எங்கள் வீடும் அவர்கள் வீடும் வேலியே இல்லாத ஒரே வளவில் இருப்பது போல எம் உறவுகள் அனைவரோடும் அவர்கள் உறவுக்கும் வேலியே கிடையாது. கால ஓட்டத்தில் அன்னார் கொழும்பு சென்று பின்னர் கனடா சென்றும் கடிதத் தொடர்புகள், தொலைபேசி உரையாடல்கள் என்று தற்போதைய கால கட்டம் வரை தொடர்ந்து இருந்தது. திடீரென துக்க செய்தி கேள்வி பட்டதும் இது உண்மையாக இருக்கக் கூடாது என்று எண்ணி மீண்டும் மீண்டும் விசாரிக்க வேண்டிய துன்ப மனநிலையில் இருந்தோம். அவர் இன்று வரை எங்கள் மனதில் பசுமையான நினைவுகள் பதித்து விடைபெற்றுள்ளார். நாங்கள் இருக்கும் வரை அவரது நினைவுகள் விட்டகலாது. 🙏🏻🙏🏻🙏🏻
Our deepest condolences to you and your family. May her soul rest in peace