யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னபூரணம் அரசரத்தினம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அம்மா எப்படியம்மா சாத்தியமானது?
கண்ணிமைக்கும் கணப்பொழுதில்
காலனவன் கவர்ந்து சென்றது
உங்கள் ஒத்துழைப்புடன் போலும்.
வழமைபோல காலையில் குளித்து
பஞ்சபுராணம் பாடி வழமை போல
முருகனிடம் தினம் கேட்கும் வரம் வேண்டி
குட்டித்தூக்கம் போட்டு
மாலையில் எப்படியம்மா சாத்தியமானது?
எங்கள் காது குளிர
மற்றவர்கள் உங்கள் மறைவையொட்டி
சொன்னவார்த்தைகள் எங்களை
சற்று ஆறவைத்துள்ளது.
அம்மா மாறா நினைவுகளுடன்
ஆத்மசாந்தி வேண்டிப் பிரார்த்திக்கின்றோம்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Heartfelt condolence to the family. May her soul rest in peace inheaven