யாழ். வதிரி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அன்னபாக்கியம் கோபாலு அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மறைவுச்செய்தி அறிந்து நேரடியாகவும், தொலைபேசி, ஈ-மெயில் வாயிலாகவும், மற்றும் சமூக வலைத்தளங்களான வாட்ஸ் ஆப், வைபர், முகநூல் மூலமாகவும் அனுதாபம் தெரிவித்து ஆறுதல் கூறியவர்களுக்கும், அன்னாரின் இறுதிக்கிரியைகளின் போது சமூகம் தந்தவர்களுக்கும், ஈமக்கிரிகைகளை நேரலை வழியாகப் பார்த்து, அதில் அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், தாயாரின் இறப்புச் செய்தியை “எங்கள் சொந்தம்” மற்றும் “வதிரி மக்கள் மன்றம்” முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் பிரசுரித்த அன்புள்ளங்களுக்கும், கண்ணீர் அஞ்சலி வெளியிட்ட வதிரி மக்கள் மன்றம் - கனடா மற்றும் இலங்கை கிளையினருக்கும், வதிரி சன சமூக நிலையத்தினருக்கும், 89 Batch நண்பர்களுக்கும் மற்றும் அன்னையின் மரண அறிவித்தலை பிரசுரித்த Lankasri செய்தி நிறுவனத்தின் RIPBOOK பகுதியினருக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், Lankasri RIPBOOK பகுதியில் அஞ்சலி செலுத்திய அன்புள்ளங்களுக்கும் எங்கள் சிரம் தாழ்த்திய நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும், எமது தாயாரின் ஈமக்கிரியைகளை நடாத்துவதற்கு இட வசதி அளித்து உதவி புரிந்த Chapel Ridge Funeral Home and Cremation Centre - Canada நிறுவனத்தினருக்கும், மலர் வலயங்கள் அனுப்பி மரியாதை செலுத்திய உள்ளங்களுக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்வதுடன், இக்காலப் பகுதியில் உணவு பரிமாறிய அன்புள்ளங்களுக்கும், அந்தியேட்டி கிரியையில் பங்குபெற்ற உள்ளங்களுக்கும் எங்கள் உள்ளம் கனிந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
எங்களது ஆழ்ந்த இரங்கல்