எங்கள் வீடும் மனமும் காய்கிறதே, எங்கள் கண்களில் வடியும் கண்ணீரும் உன் அன்பின் ஆழத்தைச் சொல்லுகின்றதே. என் கால் தரையில் படாமல் என்னை இடுப்பில் சுமந்தாயே, என் முகம் சோர்ந்தால் முதலில் கண்ணீர் வருவது உன் கண்ணிலே. அப்பாவை தாங்கி வளர்த்த கைகளால் என்னையும் உன் பிள்ளைபோல் வளர்த்தாயே, அந்த அன்பின் நிழல் இன்றும் என் மனதில் நிலைக்கிறதம்மா. நான் உன்னை “குணக்கா” என்று அழைக்கும் போதெல்லாம் சிறு புன்னகைப்பாயே, நான் ஒன்றை ஆசைப்படும் போதெல்லாம் அதை அடுத்த நிமிடம் செய்து தருவாயே. எவ்வளவு கஷ்டம் வந்தாலும் எந்த ஒரு கஷ்டத்தையும் காட்டாமல் வளர்ந்தாயே, இன்று எங்களை விட்டு பிரிந்து சென்றது ஏனோ அப்பம்மா… கார்த்திகை 27 உன் மகனை சக தோழர்களுடன் உறங்க வைத்து விட்டு மறு நாள் அதிகாலை நீயும் உறங்கி விட்டாயோ அப்பம்மா… இறைவன் அடியில் சேர்ந்த உன் ஆத்மா அமைதியாய் ஓய்வெடுக்கட்டும், உன் நினைவுகள் எங்கள் வீட்டில் என்றும் ஒளிரும்மா. Miss you அப்பம்மா😭