Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 16 AUG 1949
மறைவு 19 MAY 2025
அமரர் அன்னலட்சுமி வீரசிங்கம் 1949 - 2025 புங்குடுதீவு 11ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

திதி:07/06/2026

யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு விசுவமடுவை வதிவிடமாகவும், தற்பொழுது வவுனியா கற்குழியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அன்னலட்சுமி வீரசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டாயிரம் சென்றாலும்
ஆறாதம்மா எமதுள்ளம்
ஆறாத துயரம் இன்னும் –நெஞ்சில்
நீராக நின்றெரியுதம்மா!

பாசமென்றால் எதுவென்று நாமறிய
பண்பில் உயர்ந்து நின்றாய்
நேசமிது தானென்று – எங்கள்
நெஞ்சமதை நெகிழ வைத்தாய்!

மனம் ஏங்கி தவிக்கின்றது
உங்களை காண உங்கள் குரல் கேட்க
காரணம் தெரியவில்லை
மனதுக்கு நீங்கள் இல்லையென்று புரியவில்லை
நினைவுகள் மட்டும் மிஞ்சுகிறது

எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
எமது மனம் உங்களை
தேடிக்கொண்டே இருக்கும்
என்றும் உங்கள் நினைவுகளுடன்
குடும்பத்தினர்.

அன்னாரின் முதலாம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் எதிர்வரும் 07-06-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்