

யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு விசுவமடுவை வதிவிடமாகவும், தற்பொழுது வவுனியா கற்குழியை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னலட்சுமி வீரசிங்கம் அவர்கள் 19-05-2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அப்பாகுட்டி அன்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற வீரசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
பத்மாவதி(கனடா), சுப்பிரமணியம்(கொலண்ட்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற இராசரத்தினம், சுந்தரம், சடாசிவம், சிந்தாமணி, இராசமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மாலினி(இலங்கை), ரஞ்சன்(பிரான்ஸ்), ராஜன்(கனடா), நளாயினி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவகுருநாதன்(இலங்கை), பூர்ணிமா(ஆஷா- பிரான்ஸ்), சுரேஷ்குமார்(C.T.B- கனடா), நந்தகுமாரி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுபாங்கி(பின்லாந்து), விதுஷா, சஞ்சுதன், அகிஷன், சாருணி, ஆதிரன், ஆர்னா, அட்ஷிகா, ஆரபி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-05-2025 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் பூந்தோட்டம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details