யாழ். வேலணை வடக்கு சோளாவத்தையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Mulhouse வை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னலக்சுமி வைத்திலிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
நாட்கள் 31 சென்றாலும் எங்கள் இதயங்களில்”
என்றும் நீங்காமல் குடியிருக்கும் அன்னையே!!
நீங்கள் எங்களுக்காகச் செய்த
அர்ப்பணிப்புகள் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை,
எத்தனை நாட்கள் சென்றாலும்
உங்கள் நினைவுகள்
எம் இதயங்களில்
இருந்து அகலாது
அன்பு மனைவியாக
இல்லறத்தில் வாழ்ந்தீர்கள் அம்மா!!
ஆயிரம் பிறைகள் கண்டு நிறைவாக வாழ்ந்து,
மறைந்தாலும் சூரியனாய்ப்
பிரகாசிப்பீர்கள் அம்மா....
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும்,உணவுகள் பரிமாறியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 25-07-2026 சனிக்கிழமை அன்று 8 Rue Large 68790 Morschwiller le bas Mulhouse France எனும் முகவரியில் நடைபெறும் அத்தருணம் அனைவரும் கலந்துக்கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
முகவரி:
8 Rue Large,
68790 Morschwiller le bas,
Mulhouse France.
ஆழ்ந்த இரங்கல்கள். உங்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். இந்த துயரமான நேரத்தில் உங்கள் குடும்பத்தினருக்கு மன உறுதியையும் ஆறுதலையும் இறைவன் அருள்வானாக.