யாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Salzgitter, Cologne, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அன்னலிங்கம் சுகந்தன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
மகனே என அணைக்க
முடியாத சோகத்தால்- எம்
மனம் இருண்டு போய் உள்ளது மகனே.!
வாய் விட்டுச் சொல்லவும்
வார்த்தையில்லை
மனம் விட்டுப்
பேசவும் இன்று நீ இல்லை...
நெஞ்சுருக்கும் செய்தியொன்று- நாம்
நொடிப் பொழுதில் அறிந்தோம் சகோதரனே..
இடியென வந்த செய்தி - எம்
இதயத்தை சுட்டத்து சகோதரனே...
காலனவன் வென்றானென்று
கண்ணிமைக்கும் பொழுதினிலே
காற்றினிலே
கலந்தாயண்ணா
இன்று குலவிளக்கு
அணைந்ததென்று
ஊற்றெடுக்கும்
விழிநீரால் - எம்
உதிரங்களே
கண்ணீரால் வெதும்புது சகோதரனே..
நிழல் போன்று எங்கும் தொடர்ந்தாய்
நினைவை தந்து ஏன் சென்றாய்..?
கனவாய் தொலைந்தது ஆண்டு
ஒன்று
கரையுது இன்னும்
விழியிரண்டு
உன்னோடான நினைவுகள்
சுமையாய்
கணக்கின்றன மனதினிலே...
வலியோடு தவிக்கின்றோம் - புவிமீதில்
எம் அருமை தந்தையே!
என்னை விட்டு எங்கு சென்றீரோ
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து ஓராண்டு ஆனாலும்
ஆறாது உங்கள் பிரிவுத்துயர் அப்பா...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!