4ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் அன்னலிங்கம் கிரிஷாத்
1987 -
2022
திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
Tribute
6
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். திருநெல்வேலி பரவைக்குளம் சிவன் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அன்னலிங்கம் கிரிஷாத் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
வரமிருந்து கேட்டாலும்
வாழ்க்கையிலே உன்னைப்போல்
தரமான மகன் ஒன்று
தரணியிலே யார் பெறுவார்?
நீ பிறந்த நாள் முதலாய்
கண்கலங்க விட்டதில்லை- இன்று
காலனுடன் சென்று எங்களை
கலங்க வைத்தாயே!
தக்க மகனுமாய் நல்ல நண்பனுமாய்
உன் சேயாக எங்களுக்கு
சேவை செய்யும் சேவகனாய்
பாசமாக பணி விடைகள் பல செய்தாய்
இன்று நேசம் மறந்து நெடுதூரம்
சென்றாயே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.