 
                    யாழ். பருத்தித்துறை தும்பளை நெல்லண்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அன்னலட்சுமி தங்கவடிவேலு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் குடும்பத்தின் குலவிளக்கே
நீங்கள் அணைந்த நாளிலிருந்து
எங்களின் வாழ்க்கை இருள் அடைந்து விட்டது
எங்களின் பிரகாசமான வாழ்க்கைக்கு முதல்வியாகவும்
எங்கள் குடும்பத்தின் ஆணி வேராகவும் இருந்தீர்கள்....
உங்களை இழந்த பின்பு வேர் அறுந்த 
மரங்களாக வாடி வதங்குகின்றோம்
நீங்கள் இருந்த இடத்தை நிரப்புவதற்கு இங்கு எவரும் இல்லை
இனிமேலும் வரபோவதும் இல்லை
உங்களை நினைத்து ஆறாத் துயரில் கண்ணீர் வடிக்கின்றோம்....
உங்களின் பெற்றோருக்கு சிறந்த மகளாகவும்
உடன் பிறந்தோறுக்கு உண்மையான ககோதரியாகவும்
கட்டிய கணவருக்கு அன்பான மனைவியாகவும்
பிள்ளைகளிற்கு பாசமுள்ள தாயாகவும் 
மருமக்களிற்கு அன்பான மாமியாகவும்
பேரப்பிள்ளைகளிற்கு பாசம் மிகுந்த பாட்டியாகவும்
பூட்டப்பிள்ளைகளிற்கு புன்னகை கலந்த பாசமுள்ள பூட்டியாகவும்
 
மாமன் மாமிக்கு சிறந்தொரு மருமகளாகவும்
உறவினர் எல்லோருக்கும் அன்பான மச்சாள், மாமி, மணி அக்காாகவும்
விருந்தோம்பலில் சிறந்தவாராகவும் வாழந்த காட்டிய உங்களை
காலன் கவர்ந்து சென்று ஆண்டு ஒன்று ஓடி மறைந்தது...
நாங்களோ உங்களை நினைத்து மனம் உடைந்து 
கண்ணீர் சிந்திய வண்ணம் இருக்கின்றோம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்
எங்கள் துக்கத்தில பங்கெடுத்த அனைத்து உள்ளங்களிற்கும் 
நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்...
உங்கள் நினைவால் வாடும்
கணவர், பிள்ளைகள் மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
- Contact Request Details
 
                     
         
                     
                    
ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்