Clicky

தோற்றம் 03 MAR 1932
மறைவு 12 JAN 2026
திருமதி அன்னலட்சுமி புண்ணியமூர்த்தி
ஓய்வுபெற்ற ஆசிரியை
வயது 93
திருமதி அன்னலட்சுமி புண்ணியமூர்த்தி 1932 - 2026 நயினாதீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
அன்னக்கா
Mrs Annaladchumy Punniyamoorthy
நயினாதீவு, Sri Lanka

அன்னம் என்று எங்களால் அன்பாய் அழைக்கப்படும் அன்னக்கா, இன்று எங்களை ஆறாத்துயரில் ஆழ்த்தி, அம்பாள் பாதம் பற்றித் தேனோடு கலந்த ஆன்மிகப் பயணத்தில் இணைந்துள்ளார். ஞாயிறு அன்று நீங்கள் என்னோடு பேசிய அந்த சில நிமிடங்கள்… அவைதான் உங்கள் கடைசி வார்த்தைகள் என்று நான் கனவிலும் எண்ணவில்லை. இப்போது அந்த ஒலி, அந்த நினைவுகள், என் நெஞ்சில் மெதுவாக மலர்ந்து, மறக்க முடியாத ஓசையாக ஒலிக்கின்றன. நான் ஒவ்வொரு முறையும் வீட்டுக்குள் வரும் போதெல்லாம், உங்கள் மென்மையான சிரிப்பை இன்று என் விழிகள் தேடிக்கொண்டே இருக்கின்றன. நீங்கள் ஒவ்வொரு முறையும் இலங்கை செல்லும் போதும், நான் விளையாட்டாக கேட்ட ஒவ்வொரு சிறிய பொருளையும் கூட திரும்பி வரும் போது எனக்காகக் கொண்டு வந்து, எனக்கு போட்டுப் பார்த்து அழகு பார்த்தீர்கள் இன்று அந்த கைகள் இல்லை… ஆனால் அந்த அன்பு, என் வாழ்நாளெல்லாம் நினைவாகவே இருக்கிறது. அன்னமே உங்கள் ஆத்மா சாந்தி அடைய, நயினை நாகபூசனி, இடண்டங்காலி முருகனை் பிராத்திக்கின்றேன்.

Write Tribute