கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எங்கள் பாசமிகு அன்பு மகளே
எங்கள் எல்லோரையும் விட்டு பிரிந்து ஆண்டு ஒன்று சென்றாலும்,
இன்றுவரை உன் பிரிவை
எங்களால் ஏற்றுக் கொள்ள
முடியவில்லை அம்மா !
என்றென்றும் நீ எங்களோடுதான்
வாழ்ந்து கொண்டு இருக்கின்றாய்
தங்கமகளே !
உன்னுடைய கள்ளமில்லா முகமும்,
உன்னுடைய மழலை குரலோசையும்
உன்னுடைய அன்பு த்தும்பிய
உபசரிப்பையும் இனி எங்கு
காண்போம் செல்லமே !
அக கண்ணில் உன் முகம்
தெரிகையில்
முக கண்ணில் நீர் தாரை தாரையாக
வழிந்தோடுகின்றதம்மா !
“சித்தி” என்று கூப்பிடும் உன்
கணீரென்ற குரல்
“சித்தப்பா” என்று கூப்பிடும் உன்
மழலைமொழி
“கவிலாஷ்” அண்ணா
“கணாதீஷ்”அண்ணா , என்கையில்
ஓடிவந்து அள்ளி அணைத்துக்
கொள்ளுவார்களே
என்றென்றும் நீ எங்களோடுதான்
வாழ்ந்து கொண்டு இருக்கின்றாய்
தங்கமகளே !
உன் ஆத்ம சாந்திக்காக பிரார்திக்கின்றோம் செல்லமே !
இன்னமும் ஆறாத் துயரில்
சித்தி, சித்தப்பா
கவிஅண்ணா,கணாஅண்ணா.
Write Tribute
Sadly missed by her loved ones. May her soul rest in peace.