Clicky

பிறப்பு 19 MAR 1953
இறப்பு 22 JAN 2025
திரு ஆனந்தர் பூபதி பாலவடிவேற்கரன் (பூபதி/பாலா)
வயது 71
திரு ஆனந்தர் பூபதி பாலவடிவேற்கரன் 1953 - 2025 இணுவில், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

S. V. KIRUPAharan, Paris, France 22 JAN 2025 France

பூபதியின் மனைவி, மகள், குடும்பத்தினர், நண்பர்கள் யாவருக்கும் எமது ஆழ்ந்த அனுதபங்களை தெரிவித்து கொள்கிறோம். பூபதியை முதல் முதலில், ஈரானின் தலைநகரான ரெகிறானில், 1977ம் ஆண்டின் நடுபகுதியில் சந்தித்தேன். அன்றிலிருந்து நாம் இருவரும் நன்றாக பழகினோம். பூபதி ஈரானில் வாழ்ந்த காலத்தில், அமெரிக்கருடைய இராணுவ தளம் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்தார். ஈரானில் நடந்த புரட்சியை தொடர்ந்து, அமெரிக்க இராணுவ தளம் ஜெர்மனியில் உள்ள பிராங்பெட் நகருக்கு மாற்றப்பட்ட பொழுது, பூபதியும் பிராங்பெட் நகருக்கு மாற்றப்பட்டார். 1979ம் ஆண்டில் ஜெர்மனிக்கு சென்ற சமயம், பூபதியுடன் சில நாட்கள் தங்கியிருந்தேன். 1972ம் ஆண்டின் பின்னர், தமிழீழ விடுதலை போராட்டத்தை தயார்படுத்தியவர்களில், பூபதியும் ஓருவர் என்பதை சரித்திரம் பதிவு செய்துள்ளது. இதனால், அவர் வேறுபட்ட சிறிலங்காவின் சிறைகளில் சில வருடங்கள் தனது காலங்களை களிக்க நேர்ந்தது. அன்று தமிழ் இளைஞர்கள் எப்படியாக சிறிலங்காவின் காவல்துறையினிரினால் கைது செய்யபட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, சிறைகளில் அடைக்கபட்டார்கள் என்ற தனது அனுபங்களை, ஈரானில் வாழ்ந்த காலங்களில் பூபதி எம்முடன் பகிர்வது வழமை. இடையே இடையே, தொலைபேசியில் எமது ஈரான் வாழ்க்கையின் நினைவுகளை நாம் பகிர்வது வழமை. சில வருடங்களிற்கு முன்பு ஒரு தடவை, நாம் இருவரும், முன்பு ஈரானில் வசித்த இன்னுமொரு நண்பரும், ஜெர்மனியில் உள்ள பூபதியின் வீட்டில் தங்கி, எமது ஈரான் வாழ்க்கையின் நீங்காத நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளது இன்றும் நினைவுள்ளது. பூபதியின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திகிறோம். ச. வி. கிருபா கரன் & டியேற்றி – பாரிஸ், பிரான்ஸ்.

Tributes

Summary

Notices

மரண அறிவித்தல் Wed, 22 Jan, 2025